கல்வி

டொராண்டோவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது

டொராண்டோ நகரில் 24 மணி நேர இடைவெளியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இரண்டு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டன்டாஸ் ஸ்ட்ரீட் ஈஸ்ட் மற்றும் டி கிராஸி ஸ்ட்ரீட் பகுதியில் பெண்கள் குழுவாக நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த சந்தேக நபர், ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து, பாலியல் ரீதியாகப் பேசி, அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டு தப்பியோடினார்.

டன்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் புளோர் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்திற்குள் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்ற அதே நபர், அலுவலகப் பகுதிக்குள் வைத்து அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பலத்த உடல் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், அவர்களுக்கும் குற்றவாளிக்கும் இடையே முன்அறிமுகம் ஏதும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மே மாதம் 12, திகதி இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.

சாமுவேல் ஒப்போகு (Samuel Opoku, 30). இவருக்கு நிலையான இருப்பிடம் ஏதுமில்லை. இவர் மீது இரண்டு பாலியல் அத்துமீறல் வழக்குகள் மற்றும் ஒரு அநாகரீகமாக நடந்துகொண்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

உயர்தர மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம்

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும்…