உலகம்

பாகிஸ்தான் ராணுவத்தின் புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிறைவு

நீண்ட தூர இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தரையில் இருந்து செலுத்தக்கூடிய ‘பத்தாஹ்-4’ ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தான், கடந்த ஆண்டு செப்டம்பரில் சுமார் 750 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ‘பத்தாஹ்-4’ ஏவுகணை சோதனையை நடத்தியிருந்தது.

இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய பதிப்பான ‘பத்தாஹ்-4’ ஏவுகணை சோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அது வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.

அதிநவீன வழிசெலுத்தல் அமைப்புகளுடன் கூடிய இந்த ஏவுகணை, தொலைதூர இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…