கனடா

கனடாவில் வனவிலங்குகளைத் தொந்தரவு செய்தால் பெருந்தொகை அபராதம்

 கனடாவின் வசாகா பீச் பகுதியில் அழிந்து வரும் நிலையில் உள்ள ‘பைப்பிங் பிளவர்’ (Piping Plover) பறவைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைத் தொந்தரவு செய்பவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான டொலர்கள் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை நகர சபை அமல்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே மிகவும் கடுமையான தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த புதிய விதிகளின் கீழ் விதிக்கப்படும் அபராத விபரங்கள் பின்வருமாறு:

வனவிலங்குகளைத் துன்புறுத்துதல் அல்லது தொந்தரவு செய்தால் 3000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாவரங்கள் அல்லது இயற்கை வளங்களுக்குச் சேதம் விளைவித்தால் 2500 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கைப் பலகைகளை மதிக்காமல் நடத்தலுக்கு 2000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட கடற்கரை பகுதிகளுக்குள் நுழைதலுக்கு 900 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வசாகா பீச்சின் ‘பீச் 1’ (Beach 1) பகுதி இந்தப் பறவைகள் ஆண்டுதோறும் கூடுகட்டி முட்டையிடும் முக்கிய இடமாகும். அண்மையில், இப்பகுதியில் உள்ள மணல் மேடுகளை (Dunes) கட்டுமானக் குழுவினர் தவறுதலாகச் சுத்தம் செய்ததால் பறவைகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டன.

இது தொடர்பாகச் சூழலியல் அமைப்புகள் வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து, இந்த அதிரடி சட்டத்தை நகர நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…