நோர்வூட்டில் பேருந்து விபத்து – மாணவர் காயம்

ஹட்டன் – பொககவந்தலாவ பாடசாலை பிரதான வீதியின் நோர்வூட் வென்சர் தோட்டப்பகுதியில் இன்று (22) காலை தனியார் பேருந்தும், லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணத்த மாணவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

காயமடைந்த மாணவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். 

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அந்த பேருந்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 20 பேர் வரையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version