உலகம்

அமெரிக்க புலனாய்வு பிரிவின் பிரதானி இராஜினாமா!

அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் பிரதானி துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

தனது கணவரின் நோய் நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவித்துள்ளார். 

“எனது பதினொரு வருட திருமண வாழ்க்கையில் ஆபிரகாம் எனது பாறை போன்ற பலமாக இருந்தார். எனது தொழிலுக்கும் தற்போதைய பதவியின் பொறுப்புகளுக்கும் அவர் அளித்த ஆதரவு அளப்பரியது. 

ஆபிரகாமுக்கு அரிய வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்த சவாலான தருணத்தில் நான் அவருடன் இருக்க வேண்டும். எனவே, ஜூன் 30 ஆம் திகதி முதல் எனது இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்” என துல்சி தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…