கனடாவில் காரில் பிறந்த குழந்தை; மருத்துவராக மாறிய கணவர்!

கனடாவில் காரில் குழந்தை பிறந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள ‘டிரான்ஸ்-கனடா’ நெடுஞ்சாலையின் 242-வது மைல்கல்லை மரியா ஜாக்சன் மற்றும் பெர்னாண்டோ கோன்சலஸ் தம்பதியினருக்கு இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது.

இனி எப்போது கடந்து சென்றாலும், தங்களது பச்சிளம் மகனின் பிறந்தநாள் நினைவுக்கு வராமல் இருக்காது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில், அங்குதான் அவர்களின் வாழ்க்கைப்பயணத்தில் மறக்க முடியாத அந்த விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது என தெரிவிக்கின்றனர். மரியாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

அவர்கள் வசிக்கும் ஜாக்சன்வில் பகுதியில் இருந்து வெறும் 7 நிமிட தூரத்திலேயே ‘அப்பர் ரிவர் வேலி’ மருத்துவமனை இருந்தது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை காரணமாக பிரசவ விடுதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

Exit mobile version