உலகம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி

 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜெருசலேமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் திங்கள்கிழமை (மே 25) மாலை அனுமதிக்கப்பட்டதாக அவரது அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பிரதமரின் அலுவலகம் இந்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஹதசா ஈன் கெரெம்’ (Hadassah Ein Kerem) மருத்துவ மையத்தில் நெதன்யாகுவுக்குக் குறிப்பிட்ட சில பல் சிகிச்சைகள் (Dental treatment) மேற்கொள்ளப்பட்டு வருவதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ (The Times of Israel) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…