எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக 145க்கும் மேற்பட்ட சிறுவர்களை இணையவழியில் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டொராண்டோவைச் சேர்ந்த நபருக்கு, அமெரிக்க நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
ரமணன் பத்மநாதன் (40) என்ற இந்த நபர், ஒரு பாரிய இணையவழி பாலியல் மிரட்டல் திட்டத்தின்” பின்னணியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைத்தண்டனை முடிவடைந்த பிறகு, அவர் 10 ஆண்டுகள் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கனடாவில் அவர் ஏற்கனவே அனுபவித்து வரும் 12 ஆண்டு சிறைத்தண்டனையுடன், இந்த புதிய தண்டனையும் தொடர்ச்சியாகச் சேர்க்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
