உலகம்

சமூக வலைதளங்களில் வைரலாகும் ட்ரம்பின் புகைப்படம் ; வலுக்கும் விமர்சனங்கள்

மவுண்ட் ரஷ்மோரில் நீங்கா இடம் பிடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளுடன், தனது உருவமும் இருப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

தெற்கு டகோட்டாவின் கீஸ்டோனில் மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு, அமெரிக்காவின் பிறப்பு, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதிகளின் 60 அடி உயர முகங்கள் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிலையில் தனது முகமும் செதுக்கப்பட வேண்டும் என்பது தனது கனவு என்று ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே 2018ல் தெற்கு டகோட்டா கவர்னர் கிறிஸ்டி நோயமிடம் தெரிவித்திருந்தார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…