No products in the cart.
கனடாவில் வீடொன்றில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
கனடாவின் பிராம்ப்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக குறைந்தது இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சண்டல்வுட் பார்க்வே மற்றும் கிரவுன் விக்டோரியா டிரைவ் சந்திப்பிற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்றது என பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளனர்.














