உலகம்

பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

  பிலிப்பைன்ஸில் இன்று (08) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இந்த அனர்த்தத்தில் 114 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஜேர்மனிய புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் இந்தோனேசியாவுக்கான எச்சரிக்கை நீக்கப்பட்டது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…