உலகம்

ஈக்குவடோரை வீழ்த்தி ஐவரி கோஸ்ட் வெற்றி

உலக கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஐவரி கோஸ்ட் மற்றும் ஈக்குவடோர் ஆகிய அணிகள் இன்று (15) காலை மோதின. 

குழு E க்கான இந்தப் போட்டியின் 90 வது நிமிடத்தில் ஐவரி கோஸ்ட் அணியின் வீரர் அமட் டியல்லோ கோல் அடித்தார். 

இதன்மூலம் 1 க்கு 0 என்ற அடிப்படையில் ஐவரி கோஸ்ட் அணி ஈக்குவடோர் அணியை தோற்கடித்தமை குறிப்பிடத்தக்கது. 

இது, உலகக் கிண்ணத்தில் தென் அமெரிக்க அணிக்கு எதிராக ஐவரி கோஸ்ட் அணி பெற்ற முதல் வெற்றியாக அமைந்துள்ளது. 

அத்துடன் அனைத்து போட்டிகளிலும் ஈக்குவடோர் அணி தொடர்ந்து 19 போட்டிகளாக தோல்வியடையாமல் இருந்த சாதனையை முடிவுக்கு வந்துள்ளது.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க போர்க்கப்பல்கள் 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்கள் தொடர்பான மோதல் குறித்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில்…