கனடா

கனடாவில் இடம்பெற்ற இரட்டை கத்தி குத்து சம்பவம்

மிசிசாகாவில் இடம்பெற்ற இரட்டை கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசிசாகா சாலைக்கு மேற்கே உள்ள டன்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் சர் ஜான்ஸ் ஹோம்ஸ்டெட் பகுதிக்கு, இரவு 11 மணியளவில் காவல்துறையினர் அவசரமாக வரவழைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட இருவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவருக்கு பலத்த காயங்களும், மற்றொருவருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் இருவரது உடல்நிலையும் சீராக (Stable) உள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்காக சம்பவ இடத்தில் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர், தற்போது அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்தோ, அல்லது இது தொடர்பாக சந்தேக நபர் யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்தோ பொலிஸ் தரப்பில் இதுவரை எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. 

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…