கனடா வரலாற்றில் முதன்முறையாக அதன் சொந்த மண்ணில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இரவில், நாட்டின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாப் போட்டியைப் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவில் உள்ள தனது காதலியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சம்பவம் கனடிய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடர் கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டு முயற்சியாகத் தொடங்கியுள்ளது.
ஜூன் 12 அன்று, கனடாவின் டொரன்டோ நகரில் கனடா அணி தனது முதல் வரலாற்றுத் தொடக்க ஆட்டத்தில் போஸ்னியா-ஹெர்செகோவினாவுடன் மோதியது.
