உலகம்

ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது ; ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் அதிரடிப் பதிவு

ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கவே கூடாது எனவும், அணு ஆயுதம் இல்லாத அந்த உலகமே பாதுகாப்பானது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்காவில் தற்போது, எண்ணெய் விநியோகம் சீராக இருப்பதாகவும், பங்குச் சந்தைகள் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாட்டின் வேலைவாய்ப்புகள் சாதனை அளவை எட்டியுள்ளதுடன், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா முன்னர் இருந்ததை விட வலுவாகவும், பாதுகாப்பாகவும், உலக அளவில் பெரும் மரியாதைக்குரிய நாடாகவும் மாறியுள்ளதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…