கனடா

பயண எச்சரிக்கை!

இந்தியாவின் காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டதை சுட்டிக்காட்டி இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதி கொந்தளிப்புடன் உள்ளதால் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்க் சம்பவத்தை அடுத்து , பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் , இந்திய ராணுவம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

கனடாவில் ஓடும் போலீஸ் வாகனத்திலிருந்து தப்பித்த நபர் காயம்

கனடாவின் எல்ஜின் கவுண்டி பகுதியில், காவல்துறையின் காவலில் இருந்த நபர் ஒருவர் ஓடும் வாகனத்திலிருந்து தப்பித்து, பின்னர் காயமடைந்த சம்பவம் குறித்து மாகாணத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIU) விசாரணையைத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை மதியம்…