கனடா

கனடாவில் மின்சார ஸ்கூட்டர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மின்சார ஸ்கூட்டர்களை (E-scooters) பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிருக்கே ஆபத்தாக முடியும் காயங்கள் குறித்து கனடாவின் இரண்டு முன்னணி குழந்தைகள் மருத்துவமனைகள் அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளன.

மின்சார ஸ்கூட்டர் என்பது ஒரு விளையாட்டுப் பொருள் அல்ல; அதை மக்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என மொண்ட்ரியால் குழந்தைகள் மருத்துவமனையின் விபத்து தடுப்புப் பிரிவு இயக்குனர் டெபி ஃப்ரைட்மேன் தெரிவித்துள்ளார்.

மேலும், “மூளை பாதிப்பு, முகத்தில் கடுமையான காயங்கள், வயிற்றுப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் எலும்பு முறிவுகளுடன் பல குழந்தைகள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வரப்படுகிறார்கள்.இவை மிகவும் தீவிரமான காயங்கள் என அவர் எச்சரித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…