கனடா

கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் பரபரப்பு!

கனடாவின் வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில், நேற்றைய தினம் விமானத்தில் ஏறும் நடைமுறைகளின் போது பயணி ஒருவர் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வான்கூவரில் இருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரின்ஸ் ஜார்ஜ் நகருக்கு காலை 8:25 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் ‘விமானம் 8339’-ல் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதனால் அந்த விமானம் சுமார் 2.5 மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது. விமான ஊழியர்கள் பலரை பயணி ஒருவர் தாக்கியதாக வந்த ஆரம்பகட்ட தகவலின் அடிப்படையில், கனடிய பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…