கனடா

கனடா வந்த ஆறே நாட்களில் மனைவியைக் குத்திக் கொன்ற இந்திய கணவன்!

கனடாவிற்கு வந்த ஆறே நாட்களில், தனது மனைவியைக் குத்திக் கொன்ற இந்திய வம்சாவளி நபருக்கு எதிரான இரண்டாம் நிலை கொலைக் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டீஷ் கொலம்பியா மாகாணத்தின் அபோட்ஸ்ஃபோர்ட் நகரில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2024 மார்ச் 15 அன்று, தனது 41 வயது மனைவி பால்விந்தர் கவுரை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்ந்த கணவரான ஜக்பிரீத் சிங் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

மனைவியைக் குத்திக் கொன்றதை ஜக்பிரீத் சிங் ஒப்புக்கொண்ட போதிலும், தனக்கு ‘கொலைக்குற்றம்’ விதிக்கக் கூடாது எனவும், அதை ‘சட்டவிரோத மனிதக் கொலை’ என குறைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…