உலகம்

லஹிரு உதாரவின் சதத்துடன் இலங்கை வலுவான நிலையில்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டமுடிவில், லஹிரு உதாரவின் சிறப்பான சதத்தின் உதவியோடு இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

இலங்கை அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 25 ஓட்டங்களுக்குள் வீழ்த்த மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் வீழ்த்திய போதிலும், இரண்டாவது விக்கெட்டுக்காக அறிமுக வீரர் லஹிரு மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 255 பந்துகளில் 215 ஓட்டங்களைச் சேர்த்து ஒரு சிறந்த இணைப்பாட்டத்தை உருவாக்கினர். 

மொத்த ஓட்ட எண்ணிக்கை 240 ஆக இருந்தபோது கமிந்து மெண்டிஸ் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்ததால் இந்த இணைப்பாட்டம் முறிந்தது. அவர் ஆட்டமிழக்கும் போது 84 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 

தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் லஹிரு, இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ய 12 ஓட்டங்கள் (188 ஓட்டங்கள்) எஞ்சியிருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். 

இப்போட்டிக்கு முன்னர் அவர் 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

முதல் நாள் ஆட்டமுடிவில் குசல் மெண்டிஸ் மற்றும் சொனால் தினூஷ ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…