No products in the cart.
பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு!
பாணந்துறை ஹிரான பகுதியில் இன்று 29 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.