இந்தியா

ஜம்மு – காஷ்மீரில் அதிகாலை நிலஅதிர்வு!

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் இன்று (13) அதிகாலை சிறிய அளவிலான நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6 மெக்னிடியூட்டாகப் பதிவாகியுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. 

குறித்த மையத்தினால் ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ பதிவின்படி, அதிகாலை 2.00 மணியளவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த நிலஅதிர்வினால் இதுவரை எந்தவித உயிர்ச்சேதங்களோ அல்லது பொருட்சேதங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதமும் குறித்த மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டிருந்ததுடன், அதன் மையப்புள்ளியாக பட்டான் (Pattan) பிரதேசம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

பள்ளி மைதானத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ; கபடி பயிற்சியாளர் கைது

இந்தியா - கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.  38 வயதான கபடி பயிற்சியாளர் கபடி மற்றும் கைப்பந்து பயிற்சி மையம் நடத்தி வருகிறார். அத்துடன் அவர் சூலூர்…