உலகம்

நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது!


அமெரிக்க இராணுவம் அடுத்த 3 நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தினார். 

இதன்போது, ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரானை பலவீனப்படுத்துவதே இதன் நோக்கம் என அவர் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் வரும் நாட்களில் இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும், தொடர்ந்து பரந்த அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார். 

இதுகுறித்து மேலும் கூறிய அவர், ”அடுத்த 3 நாட்களுக்கு அமெரிக்க இராணுவம் ஈரானைக் கடுமையாகத் தாக்கப் போகிறது. அடுத்த வாரம் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகப் போகிறது. ஏனென்றால், அதற்கு அடுத்த வாரம் மின் உற்பத்தி நிலையங்கள் மீதும், அதற்கு அடுத்த வாரம் பாலங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படும். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், நாங்கள் அவர்களுடைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும், பாலங்களையும் தகர்த்துவிடுவோம்” என்று அவர் கூறினார்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…