No products in the cart.
டொராண்டோவில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள எட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹம்பர்வுட் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட்ஸ் சந்திப்புக்கு அருகிலுள்ள குடியிருப்பு வீதியொன்றில் காலை 7:00 மணியளவில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் காணப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்த பெண்ணின் வயது அல்லது இச்சம்பவத்திற்கு வழிவகுத்த காரணம் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. பொலிஸார் வருவதற்கு முன்னரே சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அவர் குறித்த அடையாளங்களோ அல்லது விவரங்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.
இக்கொலை வழக்கை கொலை வழக்கு விசாரணைப் பிரிவு ஏற்று தீவிரமாக விசாரித்து வருகிறது. விசாரணைகள் காரணமாக மார்னிங் ஸ்டார் டிரைவ் மற்றும் ரெக்ஸ்டேல் புலிவார்ட் இடையேயான ஹம்பர்வுட் புலிவார்ட் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், 416-808-2222 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.















