இந்தியா

தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம்!

தமிழக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். 

தமிழக சட்டசபை கூட்டம் விடுமுறைக்கு பின் இன்று கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றம் அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். தனித்தீர்மானத்தை கொண்டு வந்த போது முதலமைச்சர் விஜய் பேசியதாவது, 

இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி; தமிழும் தமிழனும் இல்லாத நாடு ஏது?. தமிழ் ஒரு சிந்தனை, தமிழ் அன்பு. தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் பவர். ஒரு பெயரே ஒரு சொல்லே வரலாறு என்றால் அது தமிழ்தான். தமிழ் நமது நாகரிகம், பண்பாடு ஒட்டு மொத்த உயிர் மூச்சு. 

தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது. தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசினார். 

இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாடசாலைக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பேசினார். 

இதையடுத்து முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

தமிழகத்தை ஆளப்போவது யார்? கணிப்புகள் காட்டும் திருப்பம் – மே 04   ஐ நோக்கிய மக்களின் பார்வை

வரலாற்றுப் பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.…