வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் நாட்டைச் சூழவுள்ள சில கடற்பரப்புகளுக்கான பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் இன்று (12) நண்பகல் வெளியிடப்பட்டுள்ளதுடன், அது நாளை (13) நண்பகல் 12.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.
இந்த வானிலை நிலைமை காரணமாக, குறிப்பாக மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான கடற்பரப்புகள் மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாலான கடற்பரப்புகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இந்தக் கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பான தன்மையைக் கொண்டிருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.
நிலவும் இந்தப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
