No products in the cart.
உரிமமின்றி மானை வேட்டையாடிய கனேடியருக்கு அபராதம்!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மார்க் ஜோடோயின் என்பவர், முறையான உரிமமின்றி ‘மூஸ்’ வகை மானை வேட்டையாடிய குற்றத்திற்காக 5,000 டொலர் அபராதமும், ஒரு ஆண்டு வேட்டையாடத் தடையும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 25, 2024 அன்று மாடாவா பகுதிக்கு அருகில் உள்ள முகாம் ஒன்றில் பாதுகாப்புக் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாகச் சுடப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருந்த ஆண் மூஸ் மானின் உடலைக் கண்டறிந்தனர்.
விசாரணையில் ஜோடோயினைக் கண்டறிந்த அதிகாரிகள், அவரிடம் அந்த மானின் தலை இருப்பதைக் கண்டுபிடித்தனர்.














