இலங்கை

முன்னாள் ஜனாதிபதிக்கு அவசர சத்திர சிகிச்சை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வலது காலில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் அவரது இடது காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இடது காலில் சிரட்டையை அகற்றி புதிய சிரட்டை வைப்பதற்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. தற்போது மகிந்தவின் வலது காலில் உள்ள சிரட்டையை அகற்றி புதிய சிரட்டையை பொருத்தும் சத்திர சிகிச்சையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட பல அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி முன்னாள் ஜனாதிபதியின் நலம் விசாரிப்பதற்காக  அவரின் வீட்டிற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…