No products in the cart.
ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்ற டிரம்ப் பரிசீலனை!
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதியாக உள்ள புகழ்பெற்ற ‘ஒன்டாரியோ ஏரியின் பெயரை ‘அமெரிக்கா ஏரி’ என மாற்றப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துடன் இனி பெரிய அளவில் வர்த்தகம் மேற்கொள்ள மாட்டோம் என்பதால், ஒன்டாரியோ ஏரியின் பெயரை ‘அமெரிக்கா ஏரி’ என மாற்றுவது குறித்து அமெரிக்கா தீவிரமாக பரிசீலித்து வருகிறது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மெக்சிகோ வளைகுடாவின் பெயரை ‘அமெரிக்க வளைகுடா’ என டிரம்ப் மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.














