No products in the cart.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மீண்டும் ஏற்க மைத்திரிக்கு அழைப்பு
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் இந்த அழைப்பை விடுத்துள்ளனர். கட்சியின் தலைமைப் பதவியை மீண்டும் ஏற்றுக் கொண்டு , கட்சியை ஒன்றுபடுத்த முன்வருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வதில் நாட்டம் இல்லாது போனாலும், குறைந்த பட்சம் கட்சியை ஒற்றுமைப்படுத்தும் செயற்பாட்டிற்கு தலைமைத்துவம் வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரியவருகின்றது.