இலங்கை

ஊடக சுதந்திரத்தில் இலங்கையின் நிலை!

2025ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர குறியீட்டில் இலங்கை கடந்த ஆண்டைவிட முன்னேற்றம் கண்டுள்ளது என சர்வதேச ஊடக அமைப்பான எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு அல்லது ஆர்.எஸ்.எப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஊடக சுதந்திர நிலை இன்னும் குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில், ஊடக சுதந்திரத்தின் குறைபாடுகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுற்ற சிவில் போருடன் நேரடியாக தொடர்புடையவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, போர் இடம்பெற்ற காலத்தில் பல்லாயிரக்கணக்கான செய்தியாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் இன்றுவரை பொறுப்புகூறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2.2 கோடி மக்களுடன் கூடிய நாட்டில் ஊடகத்துறை இன்னும் ஆபத்தான ஒன்றாகவே இருந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் ஊடகத் துறையில் பல்வகைமை குறைவாகவே உள்ளதாகவும் அது மிகுந்த அரசியல் கும்பல்களின் கட்டுப்பாட்டிலும் ஆற்றலின்பேரிலும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் இலங்கை 180 நாடுகளுள் 150வது இடத்தில் இருந்தது. ஆனால் 2025ஆம் ஆண்டில் அது 139வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகத்தில் ஊடக சுதந்திரம் மிகுந்த நாடாக நோர்வே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…