No products in the cart.
கனடாவின் கேப் பிரெட்டனில் கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிப் பெண் பலி!
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்திற்குட்பட்ட கேப் பிரெட்டன் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக மாநில முதலமைச்சர் டிம் ஹூஸ்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரிச்மண்ட் கவுண்டி பொலிஸாரின் தகவல்படி, கிளீவ்லேண்ட் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் சனிக்கிழமை காலை காணாமல் போயிருந்தார்.
வெள்ள நீரில் மூழ்கிய பாலத்திற்கு அப்பால் அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் அப்பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.















