உலகம்

ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்ற மறுப்பு!: பிரபல நிறுவனம்

‘ஒன்டாரியோ ஏரி’ என்ற பெயரைத் தனது இணைய வரைபடத்தில் தொடர்ந்து வைத்திருக்கப்போவதாக ‘மேப்க்வெஸ்ட்’ நிறுவனம் உறுதியளித்துள்ளது.


தனது முடிவை மீண்டும் வலியுறுத்தும் வகையில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 6 அடி உயரப் பிரம்மாண்ட விளம்பரப் பலகை ஒன்றை அந்நிறுவனம் நிறுவியுள்ளது.


சிகாகோவின் ஸ்டேட் மற்றும் ஹப்பார்ட் தெருக்களின் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகையில், அங்கிருந்து ஒன்டாரியோ ஏரிக்குச் செல்வதற்கான வழிமுறைகளுடன், “இது இன்னமும் ஒன்டாரியோ ஏரிதான். நாங்களும் இன்னமும் இங்கேயே இருக்கிறோம்” என்ற பிரச்சார வாசகம் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஒன்டாரியோ ஏரியின் பெயரை ‘அமெரிக்கா ஏரி’ என பெயர் மாற்றம் செய்வதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.


இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே மேப்க்வெஸ்ட் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது குறித்துப் பேசிய பிரதமர் மார்க் கார்னி, ஒன்டாரியோ ஏரி என்பது அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்தை விடவும் மிகவும் பழைமையானது என்றும், “யதார்த்தத்தை அதன் பெயரால் அழைப்பது என்பது அதை ஒன்டாரியோ ஏரி என்று அழைப்பதே ஆகும்” என்றும் குறிப்பிட்டார்.


ஒன்டாரியோ ஏரியின் பெயரை மாற்ற மறுத்ததைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் மேப்க்வெஸ்ட் வரைபடச் செயலியின் பயன்பாடும் பிரபலமும் மீண்டும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  

What's your reaction?

Related Posts

ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும்…