நானுஓயாவில் கோர வீதி விபத்து: இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு

நானுஓயாவில் இன்று (19) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதான குணசேகரம் திவ்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். தொழில் நிமித்தம் இன்று காலை நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி அவர் மோட்டார் சைக்கிளில் (ஸ்கூட்டர்) பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

Exit mobile version