உலகம்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 3 ஊடக நிறுவனங்கள் வழக்கு

மூன்று அமெரிக்க ஊடக நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக CNN, Politico மற்றும் MS NOW ஆகியன தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை டொனால்ட் ட்ரம்ப் இந்தத் தடையை அறிவித்திருந்தார். குறித்த நிறுவனங்கள் தனது குழுவைப் பற்றி “கட்டுக்கதைகள் அல்லது போலியான தகவல்களை” எழுதுவதாகக் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இந்நிலையில், சனிக்கிழமை தங்கள் நிருபர்களுக்கு வெள்ளை மாளிகை கட்டிடத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்தன. அதனை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்த ஊடக நிறுவனங்கள் வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், அரசாங்கம் எதை அறிக்கையிட வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்க முடியாது என்ற கொள்கையைப் பாதுகாக்க நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் செல்வதற்கு முன்னதாக, வெள்ளை மாளிகையின் கூட்டுச் செய்தி சேகரிப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக முக்கிய அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனங்கள் பின்னர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38 பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக அந்நாட்டு அரசு…