உலகம்

விமான நிலையங்களை மூடியது ரஷ்யா

மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு கருதி மொஸ்கோவில் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

வெவ்வேறு திசைகளிலிருந்து நகரத்தை தாக்குதவதற்கு முன்பே சுமார் 19 உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

தாக்குதலில் முக்கிய அதிவேக வீதிகளில் ஒன்றில் சில இடிந்து விழுந்ததாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என மொஸ்கோவின் மேயர் செர்ஜி சோபியானின் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆளில்லா விமான தாக்குதல் குறித்து உக்ரேன் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…