No products in the cart.
30,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை
நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 07 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 10,620 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
ஜனவரி மாதம் முதல் மே மாதம் 07 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 930,794 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.