No products in the cart.
பஸ் விபத்துக்கான காரணம் ,சாரதியின் கவனயீனமா?
ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலும், 35 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.