No products in the cart.
நாடாளுமன்ற நிர்வாக அதிகாரிகளுக்கான எரிபொருள் குறைப்பு
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கான எரிபொருள் கொடுப்பனவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு வரையறையின்றி எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது.
எனினும் இனிவரும் காலங்களில் மாதமொன்றுக்கு 220 லீட்டர் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்று புதிய சுற்றுநிருபம் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அமைச்சு செயலாளர்களுக்கு வழங்கப்படும் அதேயளவான எரிபொருள் மட்டுமே நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கும் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவும் புதிய சுற்றுநிருபம் ஊடாக குறைக்கப்பட்டுள்ளது.