No products in the cart.
போராட்டம் தொடர்பில் லிட்ரோவின் விசேட அறிவிப்பு
லிட்ரோ எரிவாயு கெரவலப்பிட்டி நிரப்பு வளாகத்தில் மேன்பவர் ஊழியர்கள் குழுவினர் முன்வைத்த கோரிக்கைளால் இன்று (14) ஏற்பட்ட அமைதியின்மை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.
இதனால் லிட்ரோ எரிவாயுவை நிரப்புவதிலோ அல்லது விநியோகிப்பதிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், சேவைகள் வழக்கம் போல் தொடரும் என்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக தமது சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்றும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் கூட தமக்கு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி சுமார் 250 மேன்பவர் தொழிலாளர்களைக் கொண்ட குழுவால் இன்று வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.
அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்குவதாக எழுத்துப்பூர்வ வாக்குறுதியை வழங்கும் வரை வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மாட்டோம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.