No products in the cart.
உப்பு இறக்குமதிக்கான அமைச்சரவையின் விசேட அனுமதி!
நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது.
தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கான அயடீன் கலக்காத உப்பு மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அயடீன் கலந்த உப்பு என்பவற்றை இறக்குமதி செய்ய நிபந்தனைகள் அற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 15 ஆம் திகதி கூடிய அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 10ம் திகதி வரை எந்தவொரு வர்த்தகருக்கும் உப்பு இறக்குமதி செய்வதற்கான அனுமதி நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.