உலகம்

காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் நேற்று 15 ஆம் திகதி இந்திய பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா அருகே உள்ள நாதர் ட்ரால் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்திய பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடைபெற்றது. இதில் உயிரிழந்தவர்களின் பெயர் ஆசிப் அகமது ஷேக், அமிர் நசிர் வானி மற்றும் யவர் அகமது பட் ஆகியோர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் ஆசிப் அகமது ஷேக் என்பவர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர் என கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மூன்று பேரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது

What's your reaction?

Related Posts

ODI அணிக்கு மீண்டும் திரும்பிய தசுன்!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் மற்றும் T20 இலங்கை கிரிக்கெட் அணிக்காக குசல் மெண்டிஸ் அணி தலைவராக செயற்படவுள்ளதோடு, தசுன் சானக இலங்கையின் ஒருநாள் அணிக்கு மீண்டும்…