இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் வேக எல்லை மணிக்கு 60 கி.மீ. என அறிவிப்பு!

அதிக மழை பெய்யும் காலங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் அதிக எச்சரிக்கையுடன் பயணிக்க  வேண்டும் என்று  வீதி அபிவிருத்தி அதிகாரசபை பாதுகாப்பு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. 

மழைக்காலங்களில் சாரதிகளின்  பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்குமாறு  வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்   அதிவேக நெடுஞ்சாலை செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பிரிவின்  பிரதிப்பணிப்பாளர் நாயகம்  ஆர்.ஏ.டி. கஹடபிட்டிய சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  நாடு முழுவதும் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  விபத்து அபாயம் அதிகரித்துள்ளமையால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…