No products in the cart.
அமெரிக்காவில் சூறாவளி: 32 பேர் பலி – 5000 கட்டிடங்கள் சேதம்
அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 32 பேர் பலியான நிலையில், 5,000 கட்டிடங்கள் சேதமடைந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களான கென்டகி, மிசோரி, வர்ஜீனியா பகுதியை நேற்றும், நேற்று முன்தினமும் தாக்கிய கடுமையான சூறாவளியால் கென்டகியில் 18 பேர், மிசோரியில் 7 பேர், வர்ஜீனியாவில் 2 பேர் உயிரிழந்தனர்.
மிசோரியின் செயின்ட் லூயிஸ் பகுதியில் சூறாவளி காற்றின் வேகம் 140 மைல்/மணி அளவில் வீசியது.இந்த கடுமையான சூறாவளியால் 5,000 கட்டிடங்கள் சேதமடைந்தன. 38 பேர் காயமடைந்ததாக மேயர் காரா ஸ்பென்சர் தெரிவித்தார்.