No products in the cart.
தமிழர் பகுதியில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது குழந்தை!..
மட்டக்களப்பைச் சேர்ந்த 2 வயது 10 மாத பெண் குழந்தை ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.குறித்த குழந்தை 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை 5 நிமிடங்கள் 24 வினாடிகளில் கூறி, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
மட்டக்களப்பு – கொம்மாந்துறையைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்களேயான கிஷன்ராஜ் தன்யஸ்ரீ என்ற குழந்தையே இந்த சாதனையை படைத்துள்ளது.இந்த சாதனை நிகழ்வு மட்டக்களப்பு கிறீன் காடின் ஹோட்டலில் சோழன் உலக சாதனை புத்தகத்தின் இலங்கைக் கிளையின் செயலாளர் கதிரவன் ரி. இன்பராசா தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் போது, கிஷன்ராஜ் தன்யஸ்ரீ 195 நாடுகளின் தலைநகரப் பெயர்களை மிகக் குறைந்த நேரத்தில் துல்லியமாகக் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.இந்தச் சாதனையைப் புரிந்த குழந்தைக்கு பதக்கங்கள், வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, அதிதிகள் கௌரவித்தனர்.