இலங்கை

தங்கமுலாம் துப்பாக்கி துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சரும் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் மே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இன்று 24 ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்கிஸ்ஸ பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…