No products in the cart.
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, பெருந்தோட்டத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் வரலாற்று இடம்பெயர்வு குறித்தும் செந்தில் தொண்டமான் விளக்கம் அளித்தார்.