No products in the cart.
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் பிரதமர்!
இந்தியாவுன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி இராணுவ உடையில் வந்த 4 பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் உளவுத்துறை அதிகாரி, கப்பல்படை அதிகாரி உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதிகள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் பாகிஸ்தானில் பயங்கரவாத பயிற்சி பெற்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு ராஜாங்க நடவடிக்கைகளை எடுத்தது.
நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கையில் எடுத்தது. இதன் மூலம் இந்திய இராணுவம் பாகிஸ்தான் பகுதியில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதில், சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து இதனிடையே, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டும் வரை சிந்து நதி நீர் வழங்கப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த முடிவை முறு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஈரானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, காஷ்மீர், பயங்கரவாதம், சிந்து நதி நீர் பங்கீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
பாகிஸ்தான் விருப்பம் மேலும், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், காஷ்மீர் பிரச்னை மற்றும் சிந்தி நதி நீர் பிரச்னை உள்பட அனைத்து பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகிறோம். பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக… மேலும் வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து நமது அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.
இதனிடையே, ஆக்கிரமிப்பு காஷ்மீர், பயங்கரவாதிகளை ஒப்படைப்பது குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்ணையில் தெரிவித்திருந்தார்.
ஈரான் நம்பிக்கை ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா செய்யத் அலி கமேனி கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.