அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் மாகம்மன பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. இன்று (28) காலை வீதியில் ஒரு பெரிய மரம் விழுந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அனர்த்த நிவாரணக் குழுக்கள் தற்போது வீதியை போக்குவரத்துக்கு திறக்க தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.