விளையாட்டு

புதிய சாதனை படைத்த RCB

ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 228 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2 ஆவது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறியது.

இந்த போட்டியின் வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தொடரின் தனது அனைத்து AWAY GAMES போட்டியிலும் வெற்றி பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை பெங்களூரு அணி படைத்தது. பெங்களூரு அணி மொத்தமுள்ள 14 போட்டிகளில், அதன் 7 AWAY போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

WTC 2025 இறுதிப்போட்டி – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது, இதில் அவுஸ்திரேலியா மற்றும் தென்…